சனி, 1 அக்டோபர், 2011

ஸ்ரீ நடராஜ முக்குறுணிப் பிள்ளையார் தேவஸ்தானம்



ஆலயமும் அறிமுகமும்

யாழ்ப்பாணம் நல்லூர் இராசதானியின் கீழ் பரராஜசேகர மகாராஜவின் கட்டளைப்படி பரராஜசேகர மகாராஜவின் அரச சபை பிரதிநிதியாக விளங்கிய ஸ்ரீ சூரியமூர்த்தி தம்பிரான் பரம்பரை வழி வந்தோர் சிவஞானம் சிவக்கொழுந்து ஓதுவார் வழிவந்த திரு ஆனந்தம் கனகசபை அவர்களால் பராமரிக்கப்பட்டு வழிபடப்பட்டு வரும் ஆலயம். இவ் ஆலயம் யாழ்ப்பாண மாநகரில் நல்லூர் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கல்வியங்காட்டில் ஸ்ரீ நடராஜ முக்குறுனிப் பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ளது. இங்கு இந்தியாவில் ஸ்ரீ சிதம்பரேஸ்வர் தலமாகிய கோவில்களுக்கு எல்லாம் கோயில் ஆக அமைந்த சிதம்பர நடராஜர் சந்நிதியில் பரிவார மூர்த்தியாக அமைந்துள்ள நடராஜ முக்குறுனிப் பிள்ளையார் கோயிலில் இருந்து வரவழைக்கப்பட்ட ஸ்ரீ நடராஜ முக்குறுனிப்பிள்ளையார் மூல மூர்த்தியாக விளங்குகிறார். இவ் ஆலயத்தை நிர்மானித்து பராமித்து வந்த சிவஞானம் ஓதுவார் சிவக்கொழுந்து ஓதுவார் இவர்கள் இவ் ஆலயத்தை பராமரித்தலையும் நல்லைக் கந்தன் ஆலயத்தில் தேவாரம் ஓதும் வழக்கத்தையும் தவப்பணியாக கொண்டு இருந்தார்கள். இவ் ஆலயம் மிக பழமை வாய்ந்த ஆலயம் ஆகும் முற்பட்ட காலப்பகுதியில் பரராஜசேகர மகாராவின் கட்டளைப்படி அமைக்கப்பட்ட ஆலயம் கற்கோவில் ஆக அமைந்து காணப்பட்டது பின்னர் சிவக்கொழுந்து ஓதுவார் காலப்பகுதியில் இக்கோவில் புனர்நிமானம் செய்யப்பட்டு

மூலஸ்தானம் அர்த்தமண்டபம் கற்கோவில் ஆகவும் மகாமண்டபம் ஸ்நவன மண்டபம் ஸ்தம்பமண்டபம் வசந்த மண்டபம் கோபுர வாசல் இவைகள் நிர்மானிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கனகசபை ஐயா காலப்பகுதியில் இக் கோவிலின் ஆரம்ப காலத்தில் இருந்தே இக் கோவில் கோபுர வாசலுக்கு என நிர்மானிக்கப்பட்ட நூதன சிற்ப ஆசன கல் நீண்டகாலமாக செதுக்கப்பட்டு கோபுரவாசலின் மேல் வைக்கபடாமல் காணப்பட்டது 2005ம் ஆண்டு காலப்பகுதியில் கோபுர வாசல் விஸ்தரிக்கப்பட்டு ஆசனக்கல் பிரதிஸ்டையும் இடம்பெற்றது. இவ் ஆலயத்தில் முருகப்பெருமான் சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான் நாகதம்பிரான் பழனி முருகன் ஆகிய பரிவார மூர்த்திகள் எழுந்து அருள் பாலித்து வருகிறார்கள்.

இவ் ஆலயத்தில் மாதம் இரு சதுர்த்தி மகா சதுர்த்தி திருவொம்பாவை திருப்பள்ளியெளிச்சி பிள்ளையார் கதை நடேசர் அபிஷேகம் கார்த்திகை தீபம் புதுவருடப்பிறப்பு தைப்பொங்கல் மற்றும் மணவாளக்கோல நிகழ்வுகள் இடம்பெறும்...


செவிவழி வந்த தகவல் ஸ்ரீ நடராஜ முக்குறுனிப்பிள்ளையார் ஆலயத்தில் சிவஞானம் ஓதுவார் காலத்தில் இரு மாட்டு வண்டிகள் பிணைக்கப்பட்டு அதிலே தேர் செய்யப்பட்டு முக்குறுனிப்பிள்ளையார் வீதியுலா வந்ததாக ஆவ்வூர் வாழ் மக்களின் செவிவழிவந்த தகவல் ஆகும் மேலும் சிவக்கொழுந்து ஓதுவார் காலப்பகுதியில் வெகு விமர்சையாக மானம்பூதிருவிழா இடம்பெற்றுவருவதாகவும் மேலும் ஸ்ரீ வேளாதோப்பு முத்துமாரி அம்மன் நடராஜ முக்குறுனிப்பிள்ளையார் ஆலய முன்றலில் வேட்டைத்திருவிழாவிற்கு வருவதாகவும் ஆதாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன்

குறிப்பு:- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் சந்நிதி மதுரை மீனாட்சி அம்மன் சந்நிதி மற்றும் யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் முக்குறுனிப்பிள்ளையார் ஆலயங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Introduction of Temple

Under Part iracatani pararajacekara makaraja open court, represented by the orders of Sri Suriyamurtti tampiran pararajacekara makaraja maintained by Mr.civananam civakkoluntu otuvar the temple of the Order. Divisional Secretariat, Nallur Temple in Jaffna under the city kalviyankadu Ganesha temple in the Sri nadaraja mukkuruni located on the road. Here in India, as the temple of all temples in Sri citamparesvar Chidambara Nataraj temple deity Ganesha nadaraja mukkuruni located in the entourage to be drawn from Murthy Shree Murthy nadaraja mukkuruni pillayar remains raw. The temple and the temple otuvar civakkoluntu otuvar civananam assign the maintenance of good paramittu kantan tavappani with temple tradition otum were destructive. This temple is the oldest temple in the preceding period as karko pararajacekara Maharaj Temple is built on the orders found in the temple during later otuvar civakkoluntu been reconstruction main hall,sub hall, Hall Tower in the spring entrance hall which has been reopen.This nakatampiran Palani Murugan Temple of Shiva at the entourage nataraja sivakama Sundari Polyethylene grace coming up.

This temple is the story of Ganesha Chaturthi natecar tiruvompavai Chaturthi Maha Abhishekam Karthika Deepam taipponkal and manavalakkola events featuring New Year ...

Auditory messages Sri nadaraja Mukkuruni Pillayar church civananam otuvar the two bullock carts, tied also the choice of the Mukkuruni Pillayar vitiyula came avvur inhabitants of the cevivalivanta Information is also civakkoluntu otuvar period very critically and Sri velatoppu muttumari Amman nataraja Mukkuruni Pillayar Temple l being authentic, the source said

http://www.kalviyankadu.tk/

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

ஸ்ரீ நடராஜ முக்குருணிப் பிள்ளையார் தேவஸ்தானம் கல்வியங்காடு யாழ்ப்பாணம் இலங்கை.



காரிய சித்தி மாலை(விநாயகர் அஷ்டகம்)
(காசிப முனிவர் இயற்றியது, கச்சியப்பர் மொழிபெயர்த்தது)
**************************************************

பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.

பொருள்: எல்லாவிதமான பற்றுகளையும் அறுத்தும், நற்குணங்களின் உற்பத்தியிடமாகவும் இவ்வுலகையே உண்டாக்கியும், காத்தும் மறைத்தும் லீலைகள் செய்பவனும் வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் அறுபத்து நான்கு கலைகளுக்கும் தலைவனாக இருக்கும் இருக்கும் முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானை அன்புடன் தொழுவோம்.

உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன்அவ்
உலகிற்பிறக்கும் விவகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.

பொருள்: எல்லா உலகங்களையும் நீக்கமற ஒருவனாய் நின்று காப்பவர், உலகில் நிகழும் மாற்றங்கட்கு அப்பால் ஆனவர். மேலாம் ஒளியானவர். உலக உயிர்களின் வினைப் பயனைக் களைபவர், அவரே பெருந்தெய்வம் கணபதி ஆவார். அப்பெருந்தெய்வத்தின் திருவடிகளை மகிழ்வோடு சரண் அடைவோம்.

இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் அடைகின்றோம்.

பொருள்: நம் துன்பங்கள் முழுவதும் யார் திருவருளால் தீயில் விழுந்த பஞ்சு போல் பொசுங்குமோ, உலக உயிர்களை யார் அமரர் உலகில் சேர்ப்பிப்பாரோ, எக்கடவுள் திருவருளால் நாம் செய்த பாபங்கள் தொலையுமோ அந்த நீண்ட தந்தங்களையுடைய கணபதியின் பொன்னார் திருவடிகளைச் சரண் அடைவோம்.

மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

பொருள்: எல்லா மூர்த்தங்களுக்கும் மூல மூர்த்தமாக இருப்பவரும், எல்லா ஊர்களிலும் எழுந்தருளி இருப்பவரும், கங்கை முதலான எல்லா நதிகளிலும் நிறைந் திருப்பவரும், எல்லாவற்றையும் அறிந்தும் ஏதும் அறியாதார் போல் இருப்பவரும், எல்லா உயிர்களுக்கும் நாளும் நலம் புரிபவரும், அறியாமையை அகற்றி நல்லறிவைத் தருபவரும் ஆகிய கணபதிப் பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து நாம் சரண் அடைவோம்.

செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யி இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.

பொருள்: செயல்களாகவும், செய்யப்படும் பொருள்களாகவும் இருப்பவர். எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். நாம் செய்யும் வினைப் பயனாக இருப்பவர். அவ்வினைப் பயன்களில் இருந்தும் நம்மை விடுப்பவர். அவரே முழுமுதற் கடவுள் கணபதி ஆவார். அந்த் மெய்யான தெய்வதை நாம் சரண் அடைவோம்.

வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

பொருள்: வேதங்களுக்கு எல்லம் தலைவனாக இருப்பவனும், யாவராலும் அறிந்து கொள்ளுதற்கு அரிய மேலானவனாக இருப்பவனும், வேதத்தின் முடிவாக இருந்து நடம் புரியும் குற்ற மற்றவனும், வெட்ட வெளியில் எழும் ஒங்காரத்தின் ஒலி வடிவாக இருப்பவனும், தன்வயத்தனாதல்; தூய உடம்பினன் ஆதல்; இயற்கை உணர்வினன் ஆதல்; முற்றும் உணர்தல்; இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல்; பொருள் உடைமை; முடிவில் ஆற்றல் உடைமை; வரம்பில் இன்பம் உடைமை, இவற்றை முறையே வட நூலார் சுதந்தரத்துவம் விசுத்த தேகம்; நிரன்மயான்மா ; சர்வஞ்த்வம்; அநாதிபேதம்;அநுபத சக்தி; அநந்த சக்தி; திருப்தி ஆகிய எட்டுக் குணங்களைக் கொண்டவனும், ஆன முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானின் திருவடிகளைச் சரண் அடைவோம்.

மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.

பொருள்: மண்ணில் ஐந்து வகையாக (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) இருப்பவரும்,ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர், கடல் நீர் என நான்காக இருப்பவரும், வேள்வித்தீ,சூரியன், சந்திரன் எனத் தீயில் மூன்றாக இருப்பவரும், காற்றில் புயற் காற்றாக இருப்பவரும், எங்கும் ஒன்றாய் இருக்கும் வான் வெளியாய் இருப்பவரு மாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளை அன்புடன் சரண் அடைவோம்.

பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.

பொருள்: எந்தப் பந்தமும் அற்றவன்; பசுவாகிய ஆன்மாவும், பதியாகிய இறைவனும் அவனே! அறிவினால் அவனை அறியமுடியாது. அவன் பந்தமே இல்லாதவன். ஆனால் எல்லா உயிர்களையும் பந்தப்படுத்துபவன். அவன் மேலானவன். அறிவுடையவன். அத்தகைய கணபதியை நாம் சரண் அடைவோம். பசு பதி இரண்டுமே இறைவன். பசு பதியோடு ஒடுங்குவதே அழியா இன்ப நிலையாகும். இதையே துரியம், துரியாதீதம் என்று சைவ சித்தாந்தம் கூறும்.